மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தமிழக காவல்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் ஓட்டுனர்களிடம் அசல் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், வாகன காப்பீடு ஆகிய ஆவணங்களை கேட்பர். இவற்றை டிஜி லாக்கர் முறை, எம்-பரிவாஹன் முறையில் செல்போனில் செல்போனில் பதிவு செய்து காண்பிப்பதை ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இந்த ஆவணங்களை அசல் ஆவணங்களாக கருத வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு உரிய உத்தரவுகளை பிறக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
Discussion about this post