ஆட்சியில் இருந்தபோது குடும்பத்திற்காக மட்டுமே உழைத்தது திமுக என முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம் செய்தார்.
19 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாகமலை புதுக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, அவர் பிரசாரம் செய்தார்.
மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுப்பது அதிமுக அரசு என்றும், குடும்பத்திற்காக மட்டுமே உழைப்பது திமுகவினர் என்று அவர் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு, மெரினாவில் இடம் தராதவர் கருணாநிதி என்று முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, வடபழஞ்சி தொகுதியில் பிரசாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாட்டிலேயே 100 சதவீத மின்சாரத்தை இலவசமாக வழங்குவது அதிமுக அரசு எனப் பெருமிதம் தெரிவித்தார். மேலும் அதிமுக அரசில் தான் மக்கள் நலத்திட்டங்களான தாலிக்குத் தங்கம், தனியார் மருத்துவமனையில் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு, இருசக்கர வாகனத்துக்கு மானியம் ஆகியவை தரப்படுகின்றன என்றார்.
Discussion about this post