அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த புதுக்குடி கிராம மக்கள் வீட்டிற்கு வீடு கிணறுகள் அமைத்து தங்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீர் முழுவதும் கிணறுகளில் இருந்தே எடுக்கப்படுகின்றன. கோடைக் காலங்களிலும் கிணறுகளில் இருந்து தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதாக தெரிவிக்கும் கிராம மக்கள், இதுவரை தண்ணீரை விலை கொடுத்து வாங்கியதில்லை என்று தெரிவிக்கின்றனர்.
கிணற்று நீரைக் கொண்டு வாழை, எலுமிச்சை, கொய்யா என பல்வேறு வகையான பயிர்களை விவசாயம் செய்துள்ளனர். இதனால் வறட்சி காலத்திலும் கிராமம் பசுமையாக காணப்படுகிறது.
Discussion about this post