அதிமுக அரசு, திட்டங்களுக்கு மேல் திட்டங்களை கொடுப்பதால், திமுகவிற்கு பொறாமை ஏற்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக, வசவப்புரம் பகுதியில், துணை முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்கள் அனைத்தும், தற்போது உயர்த்தி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், அதிமுக அரசு, திட்டங்களுக்கு மேல் திட்டங்களை கொடுத்துக்கொண்டிருப்பதால், திமுக பொறாமையுடன் திட்டங்களை முடக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
Discussion about this post