சபரிமலை ஐயப்பன் கோவில் வைகாசி மாத பூஜைக்காக வரும் 14 ஆம் தேதி நடை திறக்கப்பட்டவுள்ளது. சபரிமலையில் ஆண்டுதோறும் தமிழ் மாதம் நடைகள் திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் தற்போது வைகாசி மாத பூஜைக்காக வரும் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து வைத்து தீபாராதனை செய்வார். அதனை தொடர்ந்து 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறவுள்ளது.
இந்த 5 நாட்கள் நடைபெறும் பூஜைகளுக்கு பின்னர் 19 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post