மக்களவைக்கான 6ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில், 6ம் கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகள், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகள், மேற்கு வங்கம், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள தலா எட்டு தொகுதிகள் மற்றும் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையடுத்து இந்த தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. 7அம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post