தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் சூறைகாற்றுடன் அரை மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.
கடந்த மூன்று நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்ததால் அப்பகுதியில் வெப்பம் சற்று தணிந்துள்ளது. இந்த மழையின் காரணமாக, பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். காற்றின் வேகத்தால் மின்சாரம் தடைபட்ட நிலையில், மின் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மின் இணைப்பை வழங்கினர்.
Discussion about this post