வேலூர் காகிதபட்டறை பகுதியில் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்த நந்தகுமார் என்பவர் மர்ம நபர்களால் நேற்று கடத்தப்பட்டார்.
இது குறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியானது. 2 இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்திருந்த நந்தகுமாரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். நந்தகுமார் வீட்டிற்கு போன் செய்த மர்ம நபர்கள் 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். இந்தக் கடத்தில் குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. குறிப்பிட்ட மொபைல் எண்ணின் சிக்னலை ஆராய்ந்த போலீசார், அந்த அழைப்பு ஆற்காடு அடுத்த மேல்விசாரம் பகுதியில் இருந்து வந்ததை கண்டு பிடித்தனர்.
போலீசார் வருவதை அறிந்து கொண்ட கடத்தல்காரர்கள் நந்தகுமாரை அங்கேயே விட்டு விட்டு தப்பினர். இதையடுத்து, நந்தகுமாரை மீட்ட போலீசார், 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post