திமுக வஞ்சகம் எண்ணம் கொண்ட கட்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, வில்லாபுரம் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஒரு கட்சியின் தலைவர், எதிர்கட்சி தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் இங்கிதம் இல்லாமல் பேசுபவர் என்றும், அரசியல்வாதி ஒருவர், பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அளிக்கலாம் என்றால், அதை ஸ்டாலினுக்கு அளிக்கலாம் என்றும் கடுமையாக விமர்சித்தார். மேலும் திமுக வஞ்சகம் எண்ணம் கொண்ட கட்சி என்றும் சாடினார்.
Discussion about this post