மதுரையில் புதிய சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது கல்லினால் ஆன சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது
மதுரை மாநகராட்சியின் வளாகத்திற்குள் உள்ள சுற்றுச்சுவரை இடித்துவிட்டு புதிய சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக கட்டிட தொழிலாளர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளம் தோண்டும் போது பூமியில் இருந்து சுவாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் சிலையை மீட்டு எடுத்து சென்றனர். முதல் கட்ட ஆய்வில் கற்சிலை விஷ்ணு சிலை என தெரியவந்துள்ளது, தொல்லியல் துறையின் ஆய்வுக்கு பிறகு இந்த சிலை எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post