மகாராஷ்டிரா மாநிலம் உருவான தினத்தையொட்டி, நடந்த அணிவகுப்பு மரியாதையை மாநில ஆளுநர் வித்தியாசாகர் ராவ் ஏற்றுக்கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் உருவாகி, இன்றுடன் 59 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அதன் ஆண்டு விழா நிகழ்ந்தது. இதில் காவல்துறை அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் மகராஷ்டிர ஆளுநர் வித்தியாசாகர் ராவ் மற்றும் மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். அங்கு நடந்த விழாவில், மகாராஷ்டிரா மாநிலம் உருவாவதற்காக, உயிரிழந்த 105 வீரர்களின் தியாகம் குறித்து அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்துபேசினர்.
Discussion about this post