ஸ்ரீவில்லிப்புதூர் ஆண்டாள் கோயிலில் அழிந்த நிலையில் உள்ள ஓவியங்களை புதுப்பிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூர் ஆண்டாள் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோயில் சுவர்களில் புராணங்களை விளக்கும் வகையில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதன் மூலம் பல்வேறு தகவல்களை அறிந்துக் கொள்கின்றனர். இந்தநிலையில் இந்த ஓவியங்கள் பராமரிப்பின்றி அழிந்து வருவதால் சுற்றுலா பயணிகள் வேதனையடைந்துள்ளனர். ஓவியங்களை பழமை மாறாமல் வண்ணம் தீட்டி இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post