ஜெயங்கொண்டம் அருகே ஜல்லிகட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாய்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடத்தப்பட்டது. புனித அந்தோணியார் ஆலயத்தில் காளைகளுக்கு வழிபாடு நடைபெற்றது. பின்னர் சீர்வரிசை தட்டுக்களுடன் புறப்பட்டு சென்று, அங்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்ட வாடிவாசலிலிருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கிப்பிடிப்பதை காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். தஞ்சை, திருச்சி, காரைக்குடி, லால்குடி, ஜெயங்கொண்டம், அரியலூர் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 450 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Discussion about this post