இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுவால் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளார். புகையால் ஆண்டுதோறும் 12 லட்சம் பேர் பலியாவதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். எனவே, ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த தீர்மானத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதை ஏற்று புகையிலைக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post