தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்ற பகுதியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தில், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றதாக திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துராமன் என்பவர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் புகார் தெரிவித்திருந்தார். அவரது புகாரின் அடிப்படையில், மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சக இயக்குனர் முனைவர் கலியபெருமாள் தலைமையில் அதிகாரிகள், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை இயக்குநர் முனைவர் கலியபெருமாள், ஸ்டெர்லைட் ஆலையில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கை மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
Discussion about this post