இந்தியாவில் அங்கீரிக்கப்பட்ட 22 மொழிகளில், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் மொழிப்பெயர்ப்பாளர்கள் இருந்தனர். காஷ்மீரி, கொங்கனி, சந்தலி, சிந்தி, டோங்ரி ஆகிய 5 மொழிகளில் உறுப்பினர்கள் பேசும் போது, அவற்றை மொழிப்பெயர்க்க முடியாத நிலை இருந்தது. இதனால் அவற்றை பிற மொழி பேசும் உறுப்பினர்கள் புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் 5 மொழிகளுக்கு மொழிப்பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Discussion about this post