குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாக எள்ளு சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் வசிக்கும் சிறு, குறு விவசாயிகள் குறுவையின் பருவ காலம்
தவிர்த்து இடைப்பட்ட நாட்களில் எண்ணெய் வித்து பொருளான எள்ளு சாகுபடி செய்து வருகின்றனர். 70 – நாட்களில் அறுவடை செய்யக் கூடிய இந்த சாகுபாடி வானம் பாத்த பயிராகும். ஒரு ஏக்கருக்கு 3 முதல் 4 மூட்டை வரை விளைச்சல் கிடைப்பதாகவும், ஒரு மூட்டை எள்ளின் விலை 11 முதல் 12 ஆயிரம் வரை விலை கிடைப்பதாகவும், எவ்வித செலவின்றி அதிகம் லாபம் தரக்கூடிய சாகுபடியாக எள்ளு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Discussion about this post