அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதனிடையே சனிக்கிழமை நடைபெற்ற வேட்பு பரிசீலனையின்போது ராகுல் காந்தியின் பெயர், தேசியம், மற்றும் கல்வி தகுதி குறித்து சுயேட்சை வேட்பாளர் துருவலால் மனோகர் கேள்வி எழுப்பியுடன் ராகுல் காந்தியின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து விளக்கம் அளிக்க ராகுல் காந்தியின் வழக்கறிஞர் அவகாசம் கேட்டதால் அமேதி மக்களவை தொகுதியில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று அமேதியில் ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் நிம்மதியடைந்தனர். ராகுல் காந்தி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வயநாடு மக்களவை தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post