ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற லாரி மீது டெம்போ மோதியதில், பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே, கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒமதேப்பள்ளி என்ற இடத்தில், இந்த விபத்து ஏற்பட்டது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வள்ளி என்கிற பெண் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், காயமுற்றவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post