இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 262 பேர் பலியாகியுள்ளனர்.
கொழும்பில் உள்ள புகழ் பெற்ற கொச்சிகடை அந்தோணியார் தேவாலயம், மட்டக்களப்பு கட்டுவாபிட்டியா தேவாலயம், நீர் கொழும்பில் உள்ள தேவாலயம், கிங்ஸ் பெர்ரி, சான் கிரில்லா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்களில், ஈஸ்டர் பண்டிகையையொட்டி, கூட்டம் நிரம்பி வழிந்தது.
அப்போது அடுத்தடுத்து வெடித்த குண்டுகளால், பலர் உடல் சிதற தூக்கி எரியப்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களில் 262 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். லோகாஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ், ரங்கப்பா, ஹனுமந்தரராயப்பா ஆகியோர் பலியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்துள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்களை அனுப்ப இந்தியா தயாராக இருப்பதாகவும் சுஷ்மா கூறியுள்ளார்.
Discussion about this post