நெல்லை மாவட்டத்தில் திமுகவினர் தேர்தல் விதிகளை மீறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் திமுக வினர் அத்துமீறி தங்களது வாகனங்களை வாக்குச்சாவடிக்குள் கொண்டு சென்றனர். அதனை தட்டிக்கேட்ட காவல்துறையினரிடம் மிரட்டும் தோணியில் பேசிய திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் திமுக வினர் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
Discussion about this post