தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் குடித்துவிட்டு திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக எம்எல்ஏ மூர்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த திமுகவினர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.
குடிபோதையில் இருந்த திமுகவினர், ஆட்டம் பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் வாகனங்களை மறித்து ரகளை செய்த அவர்கள், அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ஒருபடி மேலே சென்ற திமுக தொண்டர் ஒருவர், தனது இடுப்பு வேட்டியை கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டது காண்பவர்களை முகம் சுளிக்க வைத்தது.
Discussion about this post