கும்மிடிப்பூண்டி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 175 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் 175 கிலோ தங்க கட்டிகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார், கும்முடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு வரப்பட்டு, தேர்தல் உதவி அலுவலர் பார்வதி தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தில், கேரளாவிற்கு ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 கிலோ 300 கிராம் கொண்ட தங்க கட்டிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்க கட்டிகளை கொண்டு சென்ற கேரளாவைச் சேர்ந்த பென்னி மீது வழக்குப் பதிவு செய்து, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் திருவல்லிக்கேணி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Discussion about this post