அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, மற்றும் லஞ்சம் பெறுவது ஆகிய குற்றங்களுக்கு, ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுப்பவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், வங்கியாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த புதிய சட்டம் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதேபோல், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க யாருடைய ஒப்புதலும் வாங்க தேவையில்லை எனவும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. லஞ்சம் பெறும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கான தண்டனை 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகளாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post