கன்னியாகுமரியில் அமமுக வாக்குச் சாவடி முகவர்களுக்காக அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் கொண்டு சென்ற பணம் மற்றும் பணம் பெற்றுக் கொண்டவர்களின் ஒப்புகைச் சீட்டு ஆகியவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அருகே பறக்கும் படை அதிகாரிகள், அந்த வழியாக வந்த சொகுசு காரை சோதனையிட்டனர். அமமுக ஒன்றிய செயலாளர் ரவியிடமிருந்து அக்கட்சியின் வாக்கு சாவடி பொறுப்பாளர்களுக்கு அளிக்க இருந்த 49 ஆயிரத்து ஐநூறு ரூபாய் மற்றும் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் கல்குளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
Discussion about this post