குமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், சீசனுக்காக மட்டும் ஆதாயம் தேடி வரும் ஆஸ்திரேலிய பறவை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் முன்பிருந்து பிரசாரத்தை துவங்கினார். வீதிவீதியாக சென்று வாக்காளர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், மதம் மற்றும் ஜாதி உணர்வுகளை தூண்டி பொய்யான பிரசாரம் மூலம் திமுக காங்கிரஸ் கட்சியினர் அரசியல் ஆதாயம் தேடுவதாக விமர்சித்தார்.
Discussion about this post