விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி அதிமுக அரசு செயல்படுகிறது என, கால்நடை பாதுகாப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக மக்களவை தொகுதி வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், விவசாயிகள் மற்றும் ஏழை எழிய மக்களின் நலன் கருதி செயல்படுவது அதிமுக அரசுதான் என குறிப்பிட்டார்.
மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவையும், கொள்கைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் நிறைவேற்றி வருவதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Discussion about this post