வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
வரும் மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றும் கட்சி பற்றி, வட இந்தியாவைச் சேர்ந்த 6 தனியார் நிறுவனங்கள் நாடு முழுவதும் கருத்துக்கணிப்புகள் நடத்தின. அந்த ஆய்வில் பாரதிய ஜனதா கட்சி 270 இடங்களில் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பாலகோடு தீவிரவாதிகள் முகாம்கள் மீது, இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய பின் இந்த கருத்துக்கணிப்புகள் மக்களிடம் நடத்தப்பட்டிருக்கின்றன. அந்த ஆய்வில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் அழிப்பு நடவடிக்கைக்கு பல்வேறு இடங்களில் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 80 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
Discussion about this post