திராவிடம் பேசும் திமுகவினர் கோவில்களில் வழிபட்டு திருநீரு பூசி பிராச்சாரத்தை தொடங்கியதோடு அர்ச்சகருக்கு 500 ரூபாய் நோட்டை ரகசியமாக கொடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வேலுச்சாமி ஓடைப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக திராவிடம் பேசும் திமுகவினர் அனைவரும் அங்குள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு திருநீரு பூசி, ஆரத்தி எடுத்துச் சென்றனர். அப்போது திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி பூசாரிக்கு ஒரு 500 ரூபாய் நோட்டை ரகசியாமாகக் கொடுத்தனர். தொடர்ச்சியாக மத வெறுப்பு கொள்கையை கடைபிடிப்பதாக பேசி வந்த திமுகவினர் தற்போது, கோவிலுக்கு சென்று மதத்தை ஆதரிப்பது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post