போர்க்கால அடிப்படையில், தண்ணீரை சேமிக்கும் திட்டம் குறித்தும், செயற்கை மழை ஏற்படுத்துவது தொடர்பாகவும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வெயில் காலம் வர இருக்கும் நிலையில் மக்கள் மட்டுமின்றி கால்நடைகள், பறவைகள் தண்ணீர் இல்லாமல் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. போதிய பருவமழை இல்லாத காரணத்தினால், தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் மிக குறைந்த அளவிலான நீர் மட்டுமே இருப்பதாகவும், எனவே, இது குறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, போர்க்கால அடிப்படையில் செயற்கை மழை ஏற்படுத்தும் திட்டம் குறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post