மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டு வரும் ஸ்டாலினுக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், அமமுகவின் குக்கர் சின்னத்திற்கு கோவிந்தா என்பது போல பரிசு வாங்கி வாங்கி பழக்கப்பட்டவர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நடைபெற உள்ள இடைத் தேர்தலில் அதிமுக 100 சதவீதம் வெற்றி பதிவு செய்யும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
Discussion about this post