பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடி செய்த விவகாரத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனு மீதான விசாரணை லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிரவ் மோடி, லண்டனுக்கு தப்பி சென்றுவிட்டார். இந்த மோசடி குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள நிரவ் மோடி உள்ளிட்டவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை அடுத்து, லண்டனில் நிரவ் மோடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
நிரவ் மோடியின் ஜாமீன் மனு மீதான முந்தைய விசாரணையின்போது, நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து ஆஜராகாததால், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி கூறியுள்ள நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெறவுள்ளது. விசாரணையின்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post