தொடர்ந்து உளுந்தூர் பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது நல்லவர்கள் ஒருபக்கமும் அராஜகம் செய்பவர்கள் மற்றொரு பக்கமும் நின்று தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறினார். மத்தியில் கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்த போது தமிழகத்தின் ஜீவாதார உரிமை பறிபோனதாக அவர் குற்றம் சாட்டினார்.
Discussion about this post