2019 மக்களவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கியுனர். வாக்களிக்கும் அனைத்து தரப்பினரையும் கவர பிரசார யுக்திகளில் பல புதிய முறைகளை அரசியல் கட்சியினர் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அதில் ஒருவகையாக பிரதமர் மோடி உருவப்படம் பொறித்த சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இத்தகைய சேலைகள் ஆடைகளுக்கு புகழ்பெற்ற சூரத் நகரில் அதிகளவு தயாராகி வருகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க இந்த வகை சேலைகள் அதிக அளவில் விற்பனையாகும் என எதிர்பாக்கப்படுகின்றது.
இந்த சேலையில் பிரதமர் மோடியின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது அதனைச் சுற்றி தாமரை மலர்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த வகையான சேலைகளில் பீரங்கிகள், போர் விமானப் படங்கள், இந்திய ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் இருப்பது போன்றும் படங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் தலைவர்கள் உருவம் பொதித்த டீஷர்ட்டுகளே அதிகளவில் விற்பனையாகியதாகவும், இந்தத் தேர்தலில் முதல் முதலாக பெண்களும் தலைவர்கள் படம் பதித்த ஆடைகளை அணிய ஆர்வம் காட்டி வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post