சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராயப்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது விமான நிலையம் நோக்கி சென்ற காரை சோதனையிட்டதில் ஆவணங்கள் இன்றி 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் எடுத்து செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பணம் எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட ஆம்னி வாகன ஓட்டுநரிடம் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, அதேபகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட தொடர் சோதனையில் ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
Discussion about this post