கொலையுதிர் காலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதால் திமுகவில் இருந்து நடிகர் ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டு இருக்கிறார்.
நடிகர் ராதா ரவி ஒன்றும் புதிதாக இப்படி பேசுபவர் அல்ல. ஏற்கனவே பல்வேறு மேடைகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து கொண்டிருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் ராதாரவி திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் வைகோ மற்றும் ராமதாஸை மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு பேசிய பேச்சுக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.”ராதா ரவி மாற்றுத்திறனாளிகளை இகழ்ச்சியாக, ஏளனமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அப்போதே பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுப்பப்பட்டது.
நாய் என்பதை நாய் என்றுதான் சொல்ல முடியும். ஆங்கிலத்தில் DOG என்று அழைத்தால் அது நல்ல வார்த்தையாகிவிடும். தமிழில் நாய் என்று அழைத்தால் அதற்காக தகராறு செய்வார்களா என தன் செயலுக்கு மோசமான ஒரு விளக்கத்தையும் கொடுத்தார் ராதாரவி. பின்பு, எதை பேச வேண்டும் என்று எழுதி கொடுக்க சொல்லுங்கள், இனிமேல் அதை பேசுகிறேன் என்று இது தொடர்பாக தொலைக்காட்சி பேட்டியில் நக்கலாகவும் பதில் கொடுத்திருந்தார்.
மேலும் ஒரு திரை நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினி, ராதா ரவி பேசுவார் என பெயர் சொல்லி அழைத்தார். அதற்கு “எனது பெயரை சொல்லி கூப்பிடும் அளவுக்கு உனக்கு தகுதியுள்ளதா ஒருமையில் அந்த தொகுப்பாளினியை மேடையில் தரக்குறைவாக விமர்சித்துவிட்டார்.
அதோடு நிற்காமல் மீ டூ விவகாரத்தில் பாடகி சின்மயி குறித்து தரக்குறைவான வார்த்தைகளில் மேடையில் விமர்சித்தது அப்போது பெண்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியது.ஆனால் அப்போது எல்லாம் திமுகவில் இருந்து எந்த ஒரு அறிக்கையும் கண்டனமும் வரவில்லை.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களை தரக்குறைவான வார்த்தைகளில் பல்வேறு முறை விமர்சித்த போது திமுக என்ன செய்து கொண்டிருந்தது போகும் இடமெல்லாம் பெண்களை இழிவுபடுத்துவதை வழக்கமாகவே கொண்டிருக்கும் ராதாரவி ஏதோ இப்போது தான் இவர் இப்படி பேசுவது போன்று அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது, திமுகவின் இரட்டை வேடத்தை தான் காட்டுகிறது. தேர்தல் நேரத்தில் தங்கள் மீது களங்கம் வரக்கூடாது என்பதற்காகவே கண்துடைப்பாக இந்த நடவடிக்கையை திமுக தலைமை எடுத்திருக்கிறது என்பது தான் நிதர்சம்.. மக்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா? சீக்கிரமே திமுகவின் சாயம் வெளுப்பதை மக்கள் பார்க்கத்தானே போகிறார்கள்.
Discussion about this post