வேலூர் மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மேடை பிரசாரம் செய்தார்.
சோளிங்கர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி மற்றும் சோளிங்கர் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ஜி.சம்பத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய மருத்துவர் ராமதாஸ் திமுகவிலிருக்கும் அனைவரும் பரம்பரை ஏழைகள் எனவும் அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் கோடி, 1 லட்சம் கோடி சொத்துகள் மட்டும்தான் இருக்கிறது என வஞ்ச புகழ்ச்சியணியில் விமர்சித்தார்
Discussion about this post