நெல்லை மாவட்டத்தில், மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வருவதால், மூலப்பொருளான களிமண்ணை, தமிழக அரசே மானிய விலையில் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர், மாவடி போன்ற பகுதிகள், மண்பாண்ட உற்பத்திக்கு புகழ்பெற்ற இடங்களாகும். தற்போது கோடைக்காலம் தொடங்கியிருப்பதால் களிமண்ணால் ஆன மண்பானைகள், தண்ணீர் குவளைகள் மற்றும் அகல்விளக்குள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த நிலையில் விறகு மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டினால், தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த தொழிலை நலிவடையாமல் தடுக்க, மூலப்பொருளான களிமண்ணை தமிழக அரசே மானிய விலையில் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post