சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மதுரை தொகுதியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவு நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் 6 கோடியே 77 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
Discussion about this post