திருச்சியில் மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, செந்தண்ணீர்புரம் பாரி தெருவில், பாலு என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆட்டோ டிரைவரான இவருக்கு, யுவராணி என்ற மனைவியும், மகனும், முத்துலட்சுமி என்ற மகளும் உள்ளனர். முத்துலட்சுமி தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். கடந்த 3 நாட்களாக பாலுவின் வீட்டுக்கதவு திறக்காமல் உள்பக்கமாக தாழிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வந்ததால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சகாயராஜ், யுவராணி மற்றும் முத்துலட்சுமி ஆகிய 3 பேரும் தூக்கு போட்டு, அழுகிய நிலையில் பிணமாக தொங்கினர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சகாயராஜின் மூத்த மகன் இறந்து விட்டதாகவும், அந்த துக்கம் தாளாமல் வீட்டில் உள்ள அனைவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Discussion about this post