புல்வாமா தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவர், பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையினர் 40 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் திரால் பகுதியில் உள்ள பிங்கிலிஷ் என்ற இடத்துக்கு அருகே தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.
இதையறிந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதிகாலை வரை நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில், புல்வாமா தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய முதாசிர் முகமது கானும், மற்றொரு தீவிரவாதியும் கொல்லப்பட்டனர்.
Discussion about this post