தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்தினை முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோன்று, மாநிலம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இங்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருத்து முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திண்டிவனத்தில் போலியோ சொட்டு மருத்துவ முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்.
Discussion about this post