ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான 40 யூனிட் சிலிக்கான் மணலும் 10 யூனிட் ஆற்று மணலும் பிடிபட்டதோடு, 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் கனிம வளத்துறை உதவி இயக்குனர் சீனிவாசராவ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர பதிவு எண் கொண்ட லாரிகள் வேகமாக வருவதை அறிந்து அதனை மடக்கி சோதனை செய்தனர். அதிகாரிகள் வாகனத்தை மடக்கியதையடுத்து லாரி ஓட்டுனர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். டாரஸ் எனப்படும் 4 பெரிய லாரிகளில் 40 யூனிட் சிலிக்கான் மணலும் மற்றொரு லாரியில் 10 யூனிட் ஆற்று மணலும் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுனர்கள் தப்பிவிட்டதால் லாரிகளை கைப்பற்றிய செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post