ராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் புகார் அளித்த இரண்டே நாட்களில் துரித நடவடிக்கை எடுத்து மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்கிய மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
போலூரின் வலங்கானேந்தல் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இங்கு குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இக்கிராம மக்கள் மனு கொடுத்தனர்.இதையடுத்து இரண்டே நாட்களில் இந்த கிராமத்தின் குடிநீர் பிரச்சினையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தீர்த்து வைத்துள்ளார். உடனடி நடவடிக்கை எடுத்து தங்களது குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்த மாவட்ட ஆட்சியருக்கு அக்கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தங்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி அவருக்கும், தமிழக அரசுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post