ஈரோடு- திருச்செங்கோடு சாலை, ஈரோடு- கரூர் சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் அரசு மருத்துவமனை சந்திப்பில் 58 கோடியே 54 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், பவானி-மேட்டூர்-தொப்பூர் சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், கோதாவரி காவிரி நதிகள் இணைப்பு திட்டம் செய்ல்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் ஈரோடு அருகே சோலாரில் மாநகராட்சிக்கு சொந்தமான 17 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் 18 கோடியே 63 லட்சம் மதிப்பிலான 1102 நல திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த விழாவில், அமைச்சர்கள், செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன், சரோஜா, மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post