மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும், அவர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற கபடி போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். அதிமுக சார்பில் கடந்த 22ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Discussion about this post