பசுமை பட்டாசு தயாரிக்க ஒப்புக்கொண்ட ஆலை உரிமையாளர்கள் தற்போது சிரமம் என கூறுவது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்தது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுவரும் நிலையில், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி கடந்த நவம்பம் 13ம் தேதி முதல் பட்டாசு ஆலைகளை மூடி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரியும், இடைக்கால தீர்ப்பு வழங்கக்கோரியும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்பலமுறை மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் பட்டாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. பசுமை பட்டாசை தயாரிக்கும் எளிமையான வழிகளை காண வேண்டியது ஆலைகளின் கடமை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஆரம்பத்தில்பசுமை பட்டாசு தயாரிக்க ஒப்புக்கொண்ட ஆலை உரிமையாளர்கள் தற்போது சிரமம் என கூறுவது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
Discussion about this post