வயதானவர்களுக்காக சூரிய சக்தியில் இயங்கும் மிதிவண்டியை 9ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்….
தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் சார்பில் இன்ஸ்பயர் விருது பெறுவதற்காக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் அளவிற்கு நிதி உதவி அளித்து புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறிய ஊக்குவித்து வருகிறது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் என்ற 9ம் வகுப்பு மாணவர், சூரிய சக்தியில் இயங்கும் மிதிவண்டியை கண்டுபிடித்துள்ளார்.
வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மிதிவண்டி, மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையிலும், பேட்டரி பொறுத்தப்பட்டு சூரிய ஒளியின் ஆற்றலை தக்க வைத்து கொண்டு பயன்படுத்தபடும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் மாணவர் விக்னேஷ்வரன்…
பல முயற்சிக்கு பிறகு தயாரிக்கப்பட்ட இந்த சோலார் சைக்கிள், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில் உள்ளதாகவும், வயதானவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் சோலார் சைக்கிளை உருவாக்குவதற்கு தனது பெற்றோர்களும், ஆசிரியர்கள் மிகவும் உதவியதாக கூறுகிறார் மாணவர் விக்னேஷ்வரன்……….
நாகரீகங்கள் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் நாட்டில், மனிதனின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. அந்தவகையில் மாணவன் விக்னேஷ்வர் கண்டுபிடித்த சோலார் சைக்கிளுக்கும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது…..
Discussion about this post