பட்டாசு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விசாரணையின்போது, பட்டாசு தொடர்பாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை விலக்கி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பட்டாசு தொழிலாளர்கள், உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுவரும் நிலையில், பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்தது.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி கடந்த நவம்பம் 13ம் தேதி முதல் பட்டாசு ஆலைகளை மூடி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரியும், இடைக்கால தீர்ப்பு வழங்கக்கோரியும், தமிழக அரசு உச்சநீதிமன்ற்ததில் பலமுறை மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் பட்டாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில், நிபந்தனைகள் தளர்த்தப்படுமா என தொழிலாளர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Discussion about this post