மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
குன்னூர் பெட்போர்டு பகுதியில் துவங்கிய பேரணியில், 200க்கும் மேற்பட்ட பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். லாலி மருத்துவமனை, மவுண்ட்ரோடு வழியாக குன்னூர் பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவடைந்தது. தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி சென்றனர். குன்னூர் நகராட்சி ஆணையாளர் ரகுநாதன், குன்னூர் சார் ஆட்சியர் ரஞ்சித் சிங் உட்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.
Discussion about this post